• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தவறாக செயல்படும் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் – ஆட்சியர் எச்சரிக்கை

June 20, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தவறாக செயல்படும் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில்,

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரூ.140 மற்றும் அதற்கான 18% ஜி எஸ் டி வரியை சேர்த்து ரூ.165 க்கு இருநூற்றுக்கும் மேற்பட்ட சேனல்களை வழங்கி வருவதோடு மட்டுமல்லாமல், ஒளிபரப்பிற்காக தமிழ்நாடு அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸை இலவசமாக வழங்கி வருகிறது.

அரசு செட்டாப் பாக்ஸ் பெற்று பயனடைந்து வரும் சந்தாதாரர்கள் விருப்பமில்லாமல், தங்களின் சுயலாபத்திற்காக சில கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு தனியார் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு அரசு செட்டாப் பாக்ஸ் மாற்றினாலோ அல்லது அரசு சிக்கல் வராது என்று தவறான தகவல்களை தெரிவித்து அரசு சந்தாதாரர்களை தனியார் சந்தாதாரர்களாக மாற்ற முற்பட்ட அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடும் அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மீது புகார் தெரிவிக்க 0422 – 2522886 மற்றும் 18004252911 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க