• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தள்ளுபடி விலையில் வாகனங்கள் , அலைமோதும் கூட்டம்

March 31, 2017 தண்டோரா குழு

பி.எஸ்-4 தொழில்நுட்ப வாகனகளை தான் இனி விற்பனை செய்ய வேண்டும் என்ற மத்திய அரசின் உத்தரவை அடுத்து பைக் நிறுவனங்கள் பி.எஸ் 3 வகை வாகனக்களுக்கு தள்ளுபடி விலை அறிவித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் கூட்டம் ஷோ ரூம்களில் அலைமோதுகின்றன.

வாகனங்களின் புகை மாசுவை கட்டுப்படுத்த சுற்றுசூழல் மாசு கட்டுப்பாட்டு ஆணையம், வாகனங்கள் வெளியிடும் மாசுகளின் அளவுகளை வரையறுத்து விதிமுறைகள் வகுத்து வெளியிட்டு வருகின்றன.

அதன் படி வாகனங்கள் வெளியிடும் புகையை கட்டுப்படுத்த சில விதிமுறைகளை வகுத்து, பி.எஸ் 3 என்ற விதி முறை அமலில் இருந்தது. இதன் பிறகு, கடும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு வாகன இன்ஜின் தயாரிக்கும் வகையில் பி.எஸ்-4 விதிமுறை, 2010-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து இந்தியாவில் வாகன புகையால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பிஎஸ் 3 தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட வாகனங்களுக்கு தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி மோட்டார் வாகன உற்பத்தியாளர்கள் உச்ச நீதிமன்றம் சென்றனர். ஆனால் உச்ச நீதிமன்றம் மோட்டார் வாகன தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.

பின்னர், மார்ச் 31-க்கு பிறகு பிஎஸ் 3 வாகனங்களை விற்கவோ, தயாரிக்கவோ, பதிவு செய்யவோ கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவின்படி பிஎஸ் 3 தொழில்நுட்பத்துடன் வாகனங்களை தயாரிக்கவோ, விற்கவோ, பதிவு செய்யவோ கூடாது என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் இந்த விதிமுறை முழுமையாக அமலுக்கு வருகிறது என்று மத்திய அரசு அறிவித்தது.

இதனால் சுமார் 8 லட்சம் வாகனங்கள் தேங்கியுள்ளது அதனை இன்றே விற்கே வேண்டும் என்ற சுழல் உள்ள காரணத்தினால் குறைந்த விலையில் அவற்றை விற்பனை செய்ய பைக் நிறுவனங்கள் முடிவு செய்து தள்ளுபடி விலையை அறிவித்துள்ளன. ரூ 12௦௦௦ முதல் 22௦௦௦ வரை தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்ட காரணத்தினால் வாடிக்கையாளர்களின் கூட்டம் ஷோ ரூம்களில் அலைமோதுகின்றன.

மேலும் படிக்க