February 5, 2022
தண்டோரா குழு
கோவை சுங்கம் பைபாஸ் ரோட்டில் தனியார் இருசக்கர வாகன ஷாரும் உள்ளது. அதன் அருகே சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் இறந்து கிடந்துள்ளார்.இதை பார்த்த அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவயிடத்துக்கு சென்று, விசாரித்தனர்.இதில்,மனநலம் பாதிக்கப்பட்ட பெண் தலையில் கல்லை போட்டு கொலை செய்ததும்,5 நாட்கள் முன்பு கொலை நடந்து உள்ளதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி பிரதே பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
பிரேத பரிசோதனையில் கொலையான பெண் 5 மாதம் கர்ப்பிணி என தெரியவந்துள்ளது. ஆனால், அந்த பெண் யார்? எந்த ஊர்? உள்ளிட்ட விபரங்கள் தெரியவில்லை. தொடர்ந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.