• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தலைமை செயலகத்தில் துப்பரவு தொழிலாளா் வேலைக்கு விண்ணப்பித்த 4600 பட்டதாரிகள் !

February 7, 2019 தண்டோரா குழு

சென்னை தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள துப்பரவு தொழிலாளா் பணியிடங்களுக்கு 4600 போ் விண்ணப்பம் செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவின் வேலை வாய்ப்பு இல்லாதோர் எண்ணிக்கை கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத வகையில் மோசமாக சரிவடைந்துள்ளது. அண்மை காலமாக நாடு முழுவதும் இளைஞா்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். இது தொடர்பாக கடந்த மாதம் தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களில் இதுவரை இல்லாத அளவில் வேலைவாய்ப்பு சரிந்துள்ளதாகவும், பணமதிப்பு நீக்கம் மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்கு பின்னர் இந்நிலை மோசமடைதுள்ளதாகவும் 1972 ஆம் ஆண்டுக்கு பிறகு வேலை வாய்ப்பு கடந்த ஆண்டுகளில் மோசமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில்,தமிழக தலைமைச் செயலகத்தில் காலியாக உள்ள 14 துப்பரவு தொழிலாளா் பணியிடங்களுக்கு பணி நிரவல் அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், இந்த பணிக்கு மொத்தமாக 4 ஆயிரத்து 600க்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்துள்ளன. இதில் பொறியியல், கலை மற்றும் அறிவியலில் பட்டம் பெற்ற மற்றும் முதுகலையில் பட்டம் பெற்றவா்கள் கூட விண்ணப்பித்துள்ளனர். மேலும் விண்ணப்பம் பெற்ற நிலையில் மக்களவைத் தோ்தல் முடிவுற்ற பின்னரே நோ்காணல் நடைபெற்று பணியாளா்கள் தோ்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் விண்ணப்பித்தவா்கள் சற்று ஏமாற்றம் அடைந்துள்ளனா்.

இந்த பணிக்கு அடிப்படை ஊதியம் சற்று அதிகமாக உள்ளதும் மற்றும் நாட்டில் நிலவும் வேலை வாய்ப்பிண்மையும் இதுபோன்ற நிலைக்கு காரணமாக அமைகின்றது. இதனால் தான் எம்.பி.ஏ., பொறியியல் படித்தவா்களும் துப்பரவு பணிக்காக விண்ணப்பித்துள்ளனா் என்று இது நிபுணா்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க