March 9, 2018
தண்டோரா குழு
தலிபான் தலைவர் மவுலானா பசுலுல்லா பற்றித் துப்புக் கொடுத்தால் 32.5கோடி ரூபாய் பரிசு தருவதாக என அமெரிக்கா அறிவிதுள்ளது.
தெக்ரீக் இ தலிபான் எனப்படும் இயக்கத்தின் தலைவர் மவுலானா பசுலுல்லா. இவர் பாகிஸ்தானில் பெண்கல்விக்காகக் குரல்கொடுத்த பள்ளிச்சிறுமி மலாலா யூசுப்சாயைக் கொல்ல உத்தரவிட்டவர். எனினும், இந்தத் தாக்குதலில் காயமடைந்த மலாலா தீவிரச் சிகிச்சைக்குப் பின் உயிர் பிழைத்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மவுலானா பசுலுல்லா பற்றித் துப்புத் தருவோருக்கு முப்பத்திரண்டரைக் கோடி ரூபாய் பரிசு தருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதேபோல் அப்துல் வாலி என்பவனைப் பற்றித் துப்புக் கொடுத்தால் பத்தொன்பதரைக் கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.