• Download mobile app
18 Oct 2025, SaturdayEdition - 3538
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தற்கொலை செய்யும் முன் பேஸ்புக்கில் லைவ் செய்த மாணவர் !

April 4, 2017 தண்டோரா குழு

19-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்ட மும்பை மாணவர், தற்கொலைக்கு முன் பேஸ்புக் லைவில் தனது தற்கொலை வீடியோவை வெளியிட்டுள்ளார்.

பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகனான இவர், மும்பையில் இருக்கும் தனியார் கல்லூரியில், பட்டப்படிப்பு பயின்று வந்துள்ளார். இவரது பெயர் அர்ஜுன் பரத்வாஜ்.

மும்பையில் இருக்கும் தனியார் விடுதியில் நேற்று மாலை 6.30 மணி அளவில், பேஸ்புக் லைவின் மூலம் தற்கொலை செய்வது எப்படி என்று பேசிவிட்டு, ஓட்டலின் 19-வது மாடியில் இருந்து குதித்து அவர் தற்கொலை செய்துகொண்டார். அவரை உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்கொலை லைவ் வீடியோவை, ஊடகங்கள் வெளியிட வேண்டாம் என்று மும்பை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும் தற்கொலை செய்துகொண்ட அர்ஜுன் பரத்வாஜ் போதைப் பழக்கத்துக்கு ஆளாகியிருந்ததாகவும், தேர்வுகளில் தொடர்ச்சியான தோல்வியால் மன உளைச்சலில் இப்படிச் செய்திருப்பதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க