கைத்தறி மற்றும் துணிநூல் தறை அமைச்சர் காந்தி தலைமையில், மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையில் கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழக (சிட்ரா) கூட்டரங்கத்தில் தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கைத்தறித்துறை அமைச்சர் பேசியதாவது:
தமிழக பெரிய அளவான ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. தமிழக அரசால் சமீபத்தில் பஞ்சு மற்றும் கழிவு பஞ்சு மீதான 1 சதவீதம் வேளாண்மை நுழைவு வரி ரத்து செய்யப்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பருத்தி உற்பத்தியை அதிகரிக்க வேண்டும்.
துணி பதனிடுதல், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பொது கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதில் உள்ள இடர்ப்பாடுகளைக் களைந்து போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் வேண்டும். பருத்தி நூல் விலையின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல் மற்றும் நூல் தட்டுபாட்டைக் களைதல் வேண்டும். தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டம் குறித்து தொழில் முனைவோர்களுடன் கவந்தாலோசிக்கப்பட்டது.
நாட்டில் 7 பெரிய அளவிலான ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலங்கள் மற்றும் ஆயத்த ஆடை பூங்காக்கள் ரூ.4445 கோடி மதிப்பீட்டில் ஐந்தாண்டுகளில் அமைக்கப்படும் என்ற ஒன்றிய அரசின் அறிவிப்பினை தொடர்ந்து, இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தமிழக அரசு தற்சமயம் முனைப்புடன் நடவடிக்கை எடுத்து வருகிறது.
நூற்பு, நெசவு, துணி பதனிடுதல், சாயமிடுதல், அச்சிடுதல், ஆடைகள் உற்பத்தி ஆகிய அனைத்தும் ஒரே இடத்தில் நடைபெறுவதற்கு வகை செய்து தமிழகத்தில் உலக தரத்திலான தொழில் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதன் மூலம் முதலீடுகளை ஈர்த்து பெருமளவில் நேரடி வேலைவாய்ப்பு மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஜவுளி தொழில் வசதிகளுடன் 1000 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் அமைக்கப்படும் இந்த பூங்காவில் ஜவுளி தொழிலுக்கு தேவையான தொழிற்சாலை, மனைப்பிரிவுகள், சாலைகள், மின்சாரம், தண்ணீர். பொது பதனிடுதல் கூடம். பொது சாயக்கழிவு நீர் நிலையம், வடிவமைப்பு மையம். ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் மையமாக ஏற்படுத்தப்படும்.
பணியாளர்கள் தங்கும் விடுதிகள், குடியிருப்புகள், போக்குவரத்து முனையங்கள் உள்ளிட்ட வசதிகள் அனைத்தும் இந்த பூங்காவில் வழங்கப்படும். இந்த பூங்காவானது, மொத்த நிலப்பரப்பில் 50சதவீதம் பரப்பளவை உற்பத்தி நடவடிக்கைகளுக்கும். தமிழகத்தில் இந்த மெகா பூங்காவினை தருமபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் அமைப்பது குறித்து முதற்கட்டமாக ஆராயப்பட்டு வருகிறது.
இவ்வாறு அமைச்சர் பேசினார்.
இக்கூட்டத்தில் கைத்தறி,கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை துறை அரசு முதன்மை செயலாளர் தர்மேந்தர் பிரதாப் யாதவ், துணிநூல் துறை கமிஷனர் வள்ளலார், கைத்தறி துறை கமிஷனர் ராஜேஷ், மாவட்ட கலெக்டர் சமிரன், ஜவுளி துறை பிரதிநிதிகள், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், பின்னலாடை தொழில் அதிபர்கள், சிறு,குறு நூற்பாலைகள் பிரதிநிதிகள், கரூர் ஏற்றுமதி சங்க பிரதிநிதிகள் மற்றும் ஒன்றிய மாநில அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த கருத்துகள் முதலமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டு, ஜவுளி துறையின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர்கள் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு