• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன் – ஹர்பஜன் சிங் டுவீட்

November 15, 2018 தண்டோரா குழு

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்த ஹர்பஜன் சிங் கடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றதில் இருந்து சாம்பியன்ஸ் பட்டத்தை வெல்லும் வரை மாஸான தமிழ் சினிமா வசனங்கள் மற்றும் பாடல் வரிகளை டிவீட்களாக பதிவிட்டு சிஎஸ்கே ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார்.

இந்நிலையில், 2019-ஆம் ஆண்டு ஐபிஎல் சீசனுக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த சீசனில் இருந்து 3 வீரர்களை மட்டும் விடுவித்து 22 வீரர்களை தக்கவைத்துள்ளது. தக்கவைக்கப்பட்டுள்ள வீரர்களுள் ஹர்பஜன் சிங்கும் இடம்பெற்றுள்ளார். இந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில், அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் தமிழில் டிவீட் செய்துள்ளார்.

ஹர்பஜன் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில்,

தமிழ் நெஞ்சங்களே நான் வந்தா ராஜாவாத்தான் வருவேன்.திரும்ப வந்துட்டேன்னு சொல்றேன் @ChennaiIPL.சும்மா நெருப்பா,சிறப்பா ஒவ்வொரு மேட்சும் #தெறிக்கவிடலாமா! வோர்ல்டு மொத்தமும் அரளவுடனும் பிஸ்து. பிசுறு கெளப்பி பெர்ளவுடனும் பல்து.Delighted to be retained for 2019 என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க