ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான படம் சர்வம் தாளமயம். இப்படம் வரும் 28ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில்,
கோவையில் சர்வம் தாளமயம் திரைப்பட குழுவினர் இன்று செய்தியாளர்களுக்கு சந்தித்து பேசினர்.
அப்போது பேசிய படத்தின் இயக்குநர் ராஜீவ்மேனன்,
நீண்ட வருடங்களுக்கு பிறகு தமிழ் படத்தை இயக்கியுள்ளதாகவும், இந்த படம் முழுக்க முழுக்க இசையை சார்ந்தது, சமூகத்தில் இசை மீது பற்றுள்ள சிறுவன்
குறித்த கதை என கூறினார். மேலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 6 பாடல்கள் உள்ளதாகவும், நடிகர் அஜித்தை வைத்து இயக்கும் எண்ணம் உள்ளதா என்ற கேள்விக்கு கதைகள் அதிகம் உள்ளதாகவும், கால்ஷீட் அமைந்தால் பணியாற்ற தயாராக இருப்பதாக விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய நடிகர் ஜீவி பிரகாஷ் குமார்,
தமிழ் சினிமாவில் 25 ஆண்டுகளுக்கு பிறகு இசையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட படம் சர்வம் தாளமயம். இப்படம் சமூகத்தையும்,அழிந்து வரும் கலை குறித்த படமாக இதுஅமைந்துள்ளது. மறைந்த பாடலாசிரியர் முத்துக்குமாரின் பாடல் இதில் ஒன்று உள்ளது. கஜா புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னால் ஆன சின்ன முயற்சி செய்தேன்.எனது இந்த முயற்சி ஆயிரம் பேரை ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை உள்ளது. கஜா புயலால் ஏற்பட்ட பேரழிவு அதிகமாக இருக்கின்றது. அதிக இடங்களில் தென்னை, வாழை மரங்கள் விழுந்ததில்அப்பகுதியே உருகுழைந்தது வேதனையானது. அரசு மட்டும் முயற்சித்தால் போதாது எல்லாரும் சேர்ந்து பாதிப்பை சரி செய்ய முயற்சிக்கவேண்டும். இன்னும் அதிகமான முயற்சியினை அரசுடன் சேர்ந்து அனைவரும் சேர்ந்து எடுக்கவேண்டும் என வலியுறுத்தினார். மேலும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நிவாரண பொருட்கள் வழங்கி ஆறுதல் கூறினேன். ஒரு சில பகுதிகளில் மின்சாரம் கிடைக்க மேலும் இரு மாதங்கள் ஆகலாம் என்கின்ற செய்தி எனக்கு வருத்தம் அளிக்கிறது. மின்சாரத்துறை ஊழியர்கள் இரவும் பகலும் பாராமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வேலை செய்து வருவது பாராட்டக்குறியது என்றும் சுட்டிக் காட்டினார்.
கோவையில் கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் உயிரிழந்த சோகம்
கழிவுநீர் முதல் தொழிற்சாலை கழிவுகள் வரை அனைத்து வகையான மாசுபாட்டையும் கட்டுப்படுத்துவதற்கான தீர்வு: மேக் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
நவீன இரு சக்கர வாகன ஹேண்டில்பார் கட்டுப்பாட்டு கூறுகளுக்கான மூலோபாய தொழில் நுட்ப கூட்டணி – பிரிகோல் லிமிடெட் மற்றும் டோமினோ எஸ். ஆர். எல். நிறுவனங்கள் கூட்டாண்மை
கோவை அல்கமி பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற அல்கமி இன்வெஸ்டிடியூச்சர் நிகழ்ச்சி
காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு தவெகவினர் மாலை அணிவித்து மரியாதை
கோவையில் மூன்று நாள் கலாஷா நகை கண்காட்சி கோலாகல துவக்கம்!