• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ் கற்றுக்கொள்ளவும், பரதநாட்டியம் கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருக்கின்றேன் – கங்கனா ரனாவத்

October 11, 2019 தண்டோரா குழு

காவேரி கூக்குரல் இயக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ள பாலிவுட் பிரபலமான நடிகை கங்கனா ரனாவத் கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஈஷா நர்சரிக்கு வந்தார்.காவிரி கூக்குரல் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்தது அதற்கு ரூபாய் 42 லட்சம் நன்கொடையும் வழங்கியிருந்த நிலையில்,காவேரி கூக்குரல் இயக்க களப்பணியை பார்வையிடுவதற்காகவும், அதில் ஈடுபட்டுள்ள மக்களை ஊக்குவிப்பதற்காகவும், பாலிவுட் பிரபலமான நடிகை கங்கனா ரனாவத் ஈஷா நர்சரிக்கு வந்தார். ஈஷா மையத்தில் நடைபெற்று வரும் நர்சரி பணிகளை பார்வையிட்ட அவர், பின்னர் அங்கேயே செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர்,

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கேரக்டரில் தலைவி திரைபடம் நடிப்பதும் , காவேரி கூக்குரல் இயக்கத்தில் பங்கேற்று இருப்பதும் எனக்கு தமிழ்நாட்டுடன் உறவினை வலுபடுத்தி வருகின்றது. ஜெயலலிதா பல்வேறு போராட்டங்களை வாழ்வில் சந்தித்ததை போலவே எனது வாழ்வும் இருக்கின்றது. அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை. ஜெயலலிதா சுயமாக சிந்தித்து செயல்பட்டு தனது வாழ்வை அமைத்து கொண்டவர். ஜெயலலிதா வரலாற்றை படித்த போது என்னை போல நடுத்தர குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதை தெரிந்து கொண்டேன். அவர் கலைத்துறையில் பல்வேறு இன்னல்களை கடந்து வந்தவர். தலைவி திரைபடம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தமிழ் கற்றுக்கொள்ளவும், பரதநாட்டியம் கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருக்கின்றேன். தலைவி படத்தின் முதல் பாதி ஜெயலலிதாவின் 20 வயது,30வயது,40 வயதுகளில் நடந்தவையாக இருக்கும்.

இரண்டாவது பாதி அரசியல் சம்மந்தப்பட்டதாக எம்.ஜி.ஆர், கலைஞருடான தொடர்புகள், அரசியல் வாழ்க்கை குறித்து இருக்கும். பன்முக தன்மை கொண்டவராக ஜெயலலிதா இருந்ததை உணர முடிகின்றது. இந்த படத்தில் அவரது கேரக்டரில் நடிக்கின்றேன், முடிந்தளவு சிறப்பாக செய்திருக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.மேலும்,காவேரி கூக்குரலுக்கு விவசாயிகள் ஆதரவு அளிக்க வேண்டும். ஆளுக்கு ஒரு மரம் நட்டு விவசாயத்தை காப்பாற்ற வேண்டும். ஈஷா மையம் இப்பணிகளை சிறப்பாக செய்து வருகின்றது எனவும் தெரிவித்தார்.

மேலும் படிக்க