March 2, 2018
தண்டோரா குழு
தமிழ் இருக்கைக்கு இதுவரை 39.5 கோடி கிடைத்துள்ளதாக அமைச்சர் மாபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் பேசிய அவர்,
தமிழ் இருக்கைக்கு இதுவரை 39.5 கோடி கிடைத்துள்ளது. தமிழ் இருக்கைக்கு தமிழக அரசு நேரடியாக ரூ.10 கோடியும், உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் 2.6 கோடியும் கிடைத்துள்ளது.தமிழ் இருக்கைக்காக 26 நாடுகளிலிருந்து நிதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதிக்காக 9,800 பேருக்கு மேல் பங்களித்துள்ளனர். பிப்ரவரி மாதத்தின் படி, 5.6 மில்லியன் டாலர் அதாவது 36 கோடி கிடைத்துள்ளதாக ஹார்வார்ட் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மேலும்,காவிரி விவகாரம் தொடர்பாக நிதின் கட்கரி பேச்சு அரசியல் நோக்கம் உள்ளதாக தெரிகிறது. மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அரசியல் நோக்கமான பேச்சாக இருந்தாலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பை மீறி எதுவும் செய்ய முடியாது என்று நம்புகிறோம். அதன்படி மத்திய அரசு நீதி வழங்கும் என நம்புகிறோம்.
இதுவரை இல்லாத வகையில் அனைத்துக்கட்சி கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.பல்வேறு கோரிக்கைகள், வாதங்கள் அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ளது என்று கூறினார்.