July 17, 2021
தண்டோரா குழு
தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும்
என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நீலகிரி,கோவை,தேனி, கிருஷ்ணகிரி,தருமபுரி,சேலம்,நாமக்கல், பெரம்பலூர்,அரியலூர்,தி.மலை,திருப்பத்தூர், வேலூர்,ராணிப்பேட்டை,காஞ்சி, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய 16 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், அரபிக்கடலில் இன்று முதல் 18ம் தேதி வரை கேரளா, கர்நாடகா, லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.