March 16, 2018
தண்டோரா குழு
தமிழகத்தில் விவசாயத்திற்கு தண்ணீரின்றி இருப்பதால் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விவசாயிகள் அரசியல் கட்சியினர் குரல் கொடுத்து வருகின்றனர்.அதைப்போல் சினிமா துறையினரும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விவேக் தனது டுவிட்டர் பக்கத்தில்,
தமிழ் நாட்டில் இறந்து கொண்டிருக்கும் 2 விஷயங்கள் விவசாயம் மற்றும் சினிமா. அதை அழிப்பது வறண்ட நீர் நிலை,காணாமல் போன ஆறுகள், மரங்கள்,மீத்தேன் போன்ற திட்டங்கள்.இதை அழிப்பது வரைமுறை அற்ற வெளியீடு,fdfs இணைய விமர்சனங்கள்,கட்டண உயர்வு, சம்பள உயர்வு. அரசு தலையிடாமல் தீர்வு இல்லை என கூறியுள்ளார்.