• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் ஃபிளாட் பத்திரப் பதிவு செய்வதில் பழைய முறையை பின்பற்ற கோவை கிரெடாய் அமைப்பு தமிழக அமைச்சரிடம் கோரிக்கை

December 16, 2023 தண்டோரா குழு

அடுக்குமாடி குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் பத்திரப்பதிவு செய்யும் முறையில் தமிழ்நாடு அரசு டிசம்பர் 1-ம் தேதியிலிருந்து மாற்றம் செய்துள்ளது.

இதுவரை அடுக்குமாடி குடியிருப்புகளில் ஃபிளாட் வாங்குபவர்கள் “பிரிபடாத பாக நில விற்பனைக்கு” ஒரு பத்திரப் பதிவும், வாங்கும் ஃபிளாட்டின் “கட்டுமான ஒப்பந்தந்திற்கான”மற்றொரு பத்திரப்பதிவும் என இரு பத்திரப் பதிவுகளை செய்து வந்தனர்.

புதிய பத்திரப்பதிவு முறையில் கட்டணம் பல மடங்கு உயர்வு புதிய முறையில், நிலத்திற்கும் கட்டுமான ஒப்பந்ததற்கும் சேர்த்து மொத்தமாக 7% பதிவுக்கட்டணம் செலுத்து வேண்டியுள்ளது.மேலும் அப்பார்ட்மெண்டுகளுக்கு ஏரியா வாரியாக கைடுலைன் மதிப்பை அரசு நிர்ணயித்துள்ளது.இதனால் பிளாட் வாங்குபவர்கள் பழைய முறையை விட மூன்று முதல் ஐந்து மடங்கு அதிகப் பதிவுக் கட்டணம் கட்ட வேண்டியுள்ளது. இது நடுத்தர மக்களுக்கு வீடு வாங்குவதை பெரும் சுமையாக்கி அவர்கள் வீடு வாங்குவதை அவர்களின் சக்திக்கு அப்பார்ப்பட்டதாக ஆக்கியுள்ளது.இதனால் கட்டுமானத் துறை பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது.

இது தொடர்பாக 13.12.2023 அன்று கோவை கிரெடாய் அமைப்பின் தலைவர் குகன் இளங்கோ, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து புதிய பத்திரப் பதிவு முறையை பின்பற்றுவதினால் ஏற்படும் அதிகமான பாதிப்புகள் பற்றி எடுத்துரைத்து மீண்டும் பழைய இரு பத்திர பதிவு முறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து ஆலோசித்து ஆவன செய்வதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க