August 21, 2021
தண்டோரா குழு
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், கோவை வீட்டு வசதி பிரிவிற்குட்பட்ட கோவை, திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் ஒதுக்கீடு பெற்று விற்பனை பத்திரம் பெறாமல் உள்ள மனைகள், வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் ஒதுக்கீடுதாரர்களுக்கு வரும் 24, 25 மற்றும் 26ம் தேதிகளில் விற்பனை பத்திரம் வழங்கும் சிறப்பு முகாம் கோவை வீட்டு வசதிப் பிரிவு, டாடாபாத், அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
இந்த வாய்ப்பை பயன்படுத்தி முழுத் தொகை செலுத்தியவர்களும் மற்றும் நிலுவைத் தொகை செலுத்தாதவர்கள் முழுத் தொகை செலுத்தியும் விற்பனை பத்திரம் பெற்றுக் கொள்ளலாம். இந்த தகவலை கோவை வீட்டு வசதி பிரிவு செயற்பொறியாளர் கரிகாலன் தெரிவித்துள்ளார்.