January 3, 2021
தண்டோரா குழு
கோவையில் நடைபெற்ற தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விஸ்வகர்மா சமுதாய மக்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கோவையில் நடைபெற்றது சங்கத்தின் மாநில தலைவரும் டிரஸ்ட் சேர்மன் டாக்டர் ஆர்.எம்.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்ற இதில் சிறப்பு அழைப்பாளர்களாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் பால்வளத் துறை அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி மற்றும் ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் தமிழ்நாடு விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் கே.பி.எஸ்.பிரகாஷ் வரவேற்று பேசினார். இந்த மாநில செயற்குழு கூட்டத்தில் சென்னை திருச்சி சேலம் ஈரோடு ராமநாதபுரம் மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்க உறுப்பினர்கள் , கைவினைஞர்கள் தொழிற்சங்கப் பேரவையினர் மற்றும், கைவினைஞர் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்தோர் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் முக்கிய தீர்மானங்களாக விஸ்வகர்மா சமுதாய மக்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 4 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தவும் திருமணங்களுக்கு செய்யப்படும் திருமாங்கல்யத்தை நேரடியாக வினியோகம் செய்யும் உரிமையை தரவும் விஸ்வகர்மா மகளிர்க்கு அரசு சுய உதவிக் குழுக்கள் அமைத்து தரவேண்டும் எனவும் மேலும் விஷ்வகர்மா நலவாரியத்தில் விஸ்வகர்மா சமுதாயம் சார்ந்த மக்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. விழாவில் விஷ்வேஸ்வர டிரஸ்டின் பொருளாளர் கேபிஎஸ் ராஜேஷ் , மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் கனகராஜ் சண்முகம் தனுஷ்கோடி, சீனிவாசன், செல்வராஜ், நாகராஜன் கதிரேசன் சுப்ரமணியன் செல்வகுமார் உட்பட மாநில,மாவட்ட, மண்டல நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.