தமிழ்நாடு மின்சாரவாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்கள் இன்று(மார்ச் 22)கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.ஒப்பந்த தொழிலாளர்களுக்கு மின்வாரியத்தில் தொடர்ந்து பணியாற்றிட அனுமதி வழங்க வேண்டும், ஒப்பந்த பணியாளர்களை அடையாளம் கண்டு அடையாள அட்டைகளை வழங்கிட வேண்டும், அமைச்சர் அறிவித்தபடி ஒப்பந்த பணியாளர்களுக்கு 380 ருபாய் சம்பளத்தை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அனைத்து ஒப்பந்த கூட்டமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும்,கடந்த 1ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஒப்பந்த தொழிலாளர்கள்,கோரிக்கையை உடனே நிறைவேற்றிட வலியுறுத்தி இன்று ஒரு நாள் கவன ஈர்ப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதற்கு பிறகும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத பட்சத்தில் அடுத்த கட்டமாக போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்