• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஸ்மார்ட் தெரு விளக்குகளுக்கான காப்புரிமை வழங்கப்பட்டது

December 5, 2024 தண்டோரா குழு

கோயம்புத்தூர் பார்க் கல்வி குழுமங்களின் தலைமையின் கீழ் தமிழ்நாடு பொறியியல் கல்லூரி கருமத்தம்பட்டியில் இயங்கி வருகிறது.இந்த கல்லூரியின் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள், புதுமையான எரிசக்தி மூலம் இயங்கும் தானியங்கி தெரு விளக்கு மற்றும் அதில் ஏற்படும் தொழில்நுட்பக் கோளாறுகளை கண்காணிக்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக கண்டுபிடித்து காப்புரிமை பெற்றுள்ளனர்.

கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியல் துறையைச் சேர்ந்த இறுதி ஆண்டு மாணவர்கள் எம்.சஞ்சீவி, கே. லோகேஸ்வரி,எஸ்.நவீன் குமார் மற்றும் ஜி. அஸ்வத் ஆகியோர் பேராசிரியர்களின் மேற்பார்வையின் கீழ் இந்த திட்டத்தை உருவாக்கியுள்ளனர்.

இந்தத் திட்டம் ஒரு புதிய கண்டுபிடிப்பு என்பதால்,துறைத் தலைவர் மற்றும் கருவிகள் மற்றும் கட்டுப்பாட்டு பொறியியலின் பேராசிரியர்கள் திட்டமிட்டு காப்புரிமைக்கு விண்ணப்பித்தனர். காப்புரிமை HOD, டாக்டர் F. விஜய் அமிர்தா ராஜ் மற்றும் பேராசிரியர்கள் R. கோகிலா, G. சத்யா மற்றும் S. கனகவல்லி ஆகியோரின் வழிகாட்டுதலில் பூர்த்தி செய்யப்பட்டு, விண்ணப்பிக்கப்பட்டது., காப்புரிமை சமீபத்தில் வெளியிடப்பட்டது.

பார்க் கல்வி குழுமத்தின் தலைவர் Dr. P.V. ரவி, பார்க் கல்வி குழுமத்தின் முதன்மை செயல் அதிகாரி Dr.அனுஷா ரவி மற்றும் தமிழ்நாடு பொறியியல் கல்லூரியின் முதல்வர் Dr.N.S. சக்திவேல் முருகன், காப்புரிமையை வெளியிடப்பட்டதற்கு குழுவைப் பாராட்டினார்.

இந்தக் கண்டுபிடிப்பு புதுப்பிக்கத்தக்க சூரிய ஆற்றல் மற்றும் ஃபிசோ எலக்ட்ரிக் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து மின்சார ஆற்றலை உருவாக்குகிறது. இதன் மூலம் உருவாக்கப்பட்ட மின்சார ஆற்றல் பேட்டரியில் சேமித்து விளக்கின் செயல்பாட்டிற்கு தேவையான போது பயன்படுத்தப்படுகிறது. சுற்றுப்புற நிலைக்கு ஏற்ப விளக்கின் வெளிச்சத்தை சரி செய்யும் சென்சார்கள் பயன்படுத்தப்படுவதால் அதிக மின்சார சேமிப்பை உறுதி செய்கிறது.

மின்சார மற்றும் மின்னழுத்த சென்சார்கள் மூலம் விளக்கின் நிலை மற்றும் பேட்டரியின் நிலை பற்றிய தகவல் மொபைல் பயன்பாடு மூலம் அனுப்பப்படுகிறது. தெருவிளக்கில் ஏற்படும் மின்சார செயலிழப்புகளை அடையாளம் கண்டு உடனடியாக அங்கீகரிக்கப்பட்ட நபர்களுக்கு தகவல் அனுப்பப்படும். ToT நெட்வொர்க் பயன்படுத்தபட்டு தொலைநிலை கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடு செய்யப்படுகிறது. இதனால் தாமதம் இல்லாமல் விளக்கின் பராமரிப்பு மற்றும் செயல்பாடு எளிதாக நடக்கிறது

இந்த நவீன தெருவிளக்கு அமைப்பு கல்லூரி வளாகத்தின் மின்சார செலவை 40% குறைக்கும்.இந்த புதிய முயற்சி ஆற்றல் சேமிப்பு, விளக்கின் செயல் திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதுடன் கல்லூரியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் பெரும் சாதனையாக அமைந்துள்ளது.

மேலும் படிக்க