• Download mobile app
12 Nov 2025, WednesdayEdition - 3563
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் குறுகிய கால இலவச பயிற்சி வகுப்பிற்கு சேர விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

June 11, 2021 தண்டோரா குழு

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவத் துறையில் பணியாற்றி தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் இலவச பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில்,

‘கொரோனா வைரஸ் தொற்று பேரிடர் காலத்தில் அரசு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவத்துறையில் பணியாற்றிட ஆர்வமுள்ளவர்கள் தமிழக அரசு திறன் மேம்பாட்டு கழகம் வாயிலாக வழங்கப்படும் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி கல்வீரம்பாளையம் அமைந்துள்ள ஆறுதல் பவுண்டேஷன் வளாகத்தில் வழங்கப்படுகின்றது.

இப்பயிற்சி வகுப்பு 21 நாட்கள் வகுப்பறையிலும் அதைத் தொடர்ந்து மூன்று மாதங்கள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் வேலைக்கான பயிற்சி வழங்கப்படும். பயிற்சி பெறும் நபர்களுக்கு பயிற்சி பெறும் காலங்களில் இலவச பயண அட்டை மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள், தடுப்பூசிகள் போன்ற பாதுகாப்பு வசதிகள் வழங்கப்படும்.

எனவே கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட ஆர்வம் உள்ள எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் கல்வித் தகுதியுடன் 18 வயது பூர்த்தி அடைந்த ஆண் பெண் இருபாலரும் தங்களது கல்வித் தகுதி தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஆதார் விவரங்களுடன் ஆறுதல் பவுண்டேஷன் திறன் பயிற்சி வழங்கும் மையத்தை 8870770882, 9080348505அலைபேசி எண்களில் தகவல் தெரிவிப்பதுடன், மாவட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி அலுவகத்திற்கு [email protected] என்ற மின்னஞ்சல் தகவல்களை அனுப்ப வேண்டும்.

இந்தப் பேரிடர் காலத்தில் அரசு தனியார் மருத்துவமனைகளில் மருத்துவத் துறையில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி பயனடைய வேண்டும்’

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க