January 24, 2020
தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு ஒரு நாள் சுற்றுலா பயணமாக கோவையின் முக்கிய இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
தமிழக சுற்றுலா துறை சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் உள்ள சுற்றுலா தலங்கள் மற்றும் அவற்றின் முக்கியத்துவம் குறித்து பள்ளி மாணவ மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஒரு நாள் சுற்றுலா பயண திட்டத்தை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் சார்பாக இன்று காலை 8 மணியளவில் , பள்ளி மாணவ மாணவிகள் 150 பேரை மூன்று பேருந்தில் ஈஷா யோகா மையம் , பேரூர் பட்டீஸ்வரர் கோவில், வேளாண் பல்கலைக்கழகம் மியூசியம் மற்றும் வ. உ .சி பூங்கா , அரசு அருங்காட்சியகம் ஆகிய 5 க்கும் மேற்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்தப் பயணத்தை கோவை மாவட்ட கல்வித்துறை அதிகாரி அய்யண்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலாத் துறை அதிகாரி அரவிந்த் குமார் ஏற்பாடு செய்திருந்தார்.