• Download mobile app
08 Sep 2025, MondayEdition - 3498
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

July 10, 2023 தண்டோரா குழு

கோவை ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவட்ட செயலாளர் வெங்கட சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்கள் மாநிலம் முழுவதும் பிடித்தம் செய்யப்பட்ட ஜிபிஎப், எஸ் பி எஃப் தொடர்ந்து வழங்கப்படாமல் உள்ளது. எனவே விரைவில் வழங்க வேண்டும்.

குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ. 6780 அகவிலை படியுடன் வழங்க வேண்டும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஈமச்சடங்கு முன்பணம் குறித்து அரசாணை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் அவர்கள் மனு அளித்தனர்.

மேலும் படிக்க