• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு குரும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தின் இளைஞரணி மாநாடு தொடர்பான ஆலோசணை கூட்டம்

January 26, 2021 தண்டோரா குழு

தமிழ்நாடு குரும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தின் இளைஞரணி மாநாடு தொடர்பான ஆலோசணை கூட்டம் கோவை சவுரிபாளையம் பகுதியில் நடைபெற்றது.

தமிழ்நாடு குரும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தின் இளைஞரணி செயலாளராக ஆர்.கே.ராஜ்குமார் நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இளைஞரணி கிளைகளை விரிவு படுத்தும் விதமாக கோவை உட்பட பல்வேறு பகுதிகளில் ஆலோசணை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் வரும் பிப்ரவரி ஏழாம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள குரும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொது குழு கூட்டத்தில் இளைஞரணி மாநாட்டை நடத்த அனுமதி பெறுவது தொடர்பாக ஆலோசணை கூட்டம் கோவை சவுரிபாளையம் பகுதியில் நடைபெற்றது.

சவுரிபாளையம் கிளை தலைவர் லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இதில், கிருஷ்ணசாமி, நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக,தமிழ்நாடு குரும்பா மக்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் மாநில தலைவர் ஆர்.கிருஷ்ணசாமி கலந்து கொண்டு பேசினார்.முன்னதாக இளைஞரணி செயலாளர் ஆர்.கே. ராஜ்குமாருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராஜ்குமார்,

தமிழகம் முழுவதும் குரும்பா சமுதாய மக்களிடம் புதிய எழுச்சியை ஏற்படுத்தும் வகையில் இளைஞர்களை திரட்டி இரட்டை கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் மாநாடு நடத்த உள்ளதாகவும்,பிப்ரவரி ஏழாம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள மாநில பொதுக்குழு கூட்டத்தில் மாநாடு நடத்துவது தொடர்பாக அனுமதி கோர உள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆலோசணை கூட்டத்தில் திருமண தகவல் மைய தலைவர் சத்யநாராயாண,அபி அசோசியேட் செந்தில் குமார், மாநில இளைஞரணி ஒருங்கிணப்பாளர் செந்தில் குமார்,மற்றும் சவுரிபாளையம் கிளை நிர்வாகிகள் சண்முகசுந்தரம், பிரபு ,தேவ ராஜ்,பாலசுந்தரம், துரைராஜ்,ரங்கநாதன், மோகன்ராஜ்,வடிவேல்,தங்கராஜ் மற்றும் ,மயிலேறிபாளையம் கிளை நிர்வாகிகள் முருகேஷ் கோவிந்தராஜ் ரவி, லோகநாதன்,மனோஜ்குமார், பொன்ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க