July 24, 2021
தண்டோரா குழு
தமிழ்நாடு காமராஜ், இந்திரா ,சிவாஜி கணேசன் பொதுநல சங்கம் சார்பாக கோவையில் காமராஜர் பிறந்தநாள் விழா மற்றும் சிவாஜி நினைவு தினத்தை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது.
காமராஜரின் 120 வது பிறந்தநாள் விழா கடந்த வாரம் கொண்டாடப்பட்டது.அதே போல மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நினைவு தினமும் இதே போல அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு காமராஜ், இந்திரா சிவாஜி கணேசன் பொதுநல சங்கம் சார்பாக காமராஜர் மற்றும் சிவாஜி கணேசன் நினைவாக அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ராம்நகர் பகுதியில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
தமிழ்நாடு காமராஜ், இந்திரா ,சிவாஜி கணேசன் பொதுநல சங்கத்தின் மாநில தலைவர் முத்துக்குமார் தலைமையில் நடைபெற்ற இதில் சங்கத்தின் மாநில செயல் தலைவர் எம்.எல்.கான் சென்னையில் இருந்து வந்து கலந்து கொண்டார்.மேலும் சிறப்பு அழைப்பாளராக தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயகுமார் கலந்து கொண்டார்.
முன்னதாக காமராஜர் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோரின் படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது.தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாகிகள் இருகூர் தங்கவேல், சிவகுமார் ராதாகிருஷ்ணன், அரிமா கே என் ஆறுமுகம் தர்மராஜ் ராஜ்குமார் ,ஜெலாப்தீன், உதயகுமார், ராமச்சந்திரன், மகளிரணி நிர்வாகிகள் தமிழ்ச்செல்வி,பங்கஜா ராஜூ, தாரா பத்மாவதி, லட்சுமி கந்தசாமி, கலாவதி, சுப்புலட்சுமி, வசந்தி,உட்பட பலர் கலந்து கொண்டனர்.