• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழ்நாடு உயர்கல்வி துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது – அமைச்சர் அன்பழகன்

February 26, 2019 தண்டோரா குழு

கோவை பாரதியார் பல்கலைகழக 35 வது பட்டமளிப்பு விழா பல்கலை வளாகத்தில் உள்ள அரங்கில் நடைபெற்றது.இந்த பட்டமளிப்பு விழாவில்,தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் இந்த பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றனர். இந்த பட்டமளிப்பு விழாவில் பாரதியார் பல்கலை கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளில் இளங்கலை, முதுகலை,டிப்ளமோ மற்றும் முனைவர் படிப்புகளை முடித்த 88762 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு படலடங்களை வழங்கினார்.

இந்த பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன்,

தமிழ்நாடு உயர்கல்வி துறையில் முன்னோடி மாநிலமாக திகழ்கின்றது. 18 வயது முதல் 23 வரை உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிகை தமிழகத்தில் அதிகம். 2020 ஆம் ஆண்டு உயர் கல்வி பெறுவோர் எண்ணிக்கை 30 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என மத்திய அரசு இலக்கு நிர்ணயித்த நிலையில் , 2017- 2018 ஆம் ஆண்டு அறிக்கையின் படி தமிழகத்தில் 48.6 சதவிகிதம் பேர் உயர் கல்வி பெற்றிருக்கிறது. இந்திய அளவில் 21.8 சதவிகிதம் தாழ்தப்பட்ட மக்கள் உயர் கல்வி பெற்றுள்ள நிலையில், தமிழகத்தில் 42.1 சதவிகிதம் தாழதப்பட்ட மக்கள் உயர்கல்வி படித்துள்ளதாக கூறினார்.

மேலும், 15.9% பழங்குடியினர் உயர் கல்வி பெற்றுள்ள நிலையில் தமிழகத்தில் 40.5 சதவிகிதம் பேர் உயர் கல்வி பெற்றுள்ளனர். மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் தரவரிசை பட்டியலில் இந்திய அளவில் 13 வது இடத்தில் பாரதியார் பல்கலை கழகம் இருக்கின்றது. தேசிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் மூலம் 125 கோடி மதிப்பிலான நுணுக்கமாக ஆய்வு மையம் நிறுவதற்கு 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது, அதில் ஒரு மையம் பாரதியார் பல்கலை கழகம் எனவும் அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.

மேலும் படிக்க