• Download mobile app
06 Sep 2025, SaturdayEdition - 3496
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசு டாக்டர் சங்கத்தினர் கோவை அரசு மருத்துவமனையில் போராட்டம்

October 9, 2023 தண்டோரா குழு

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்ற முடிந்த சூழ்நிலையில் மகப்பேறு மருத்துவர்களின் பணிச்சுமை மகப்பேறு மரண தணிக்கை மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் பல்வேறு பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு காணும் வகையில் பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இதில் விவாதிக்கப்பட்ட கோரிக்கைகள் சம்பந்தமாக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மற்றும் தேசியத் திட்ட இயக்குனர் ஆகியோருக்கு கோரிக்கைகள் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது அதனை பரிசீப்பதாக கூறிவந்தனர்.அதேபோல மதுரை மாநகர சுகாதார அலுவலரின் பணியிடை நீக்கம் குறித்தும் எந்த விதமான தீர்வும் கிடைக்கவில்லை என்று கூறி இன்று மாநிலம் முழுவதும் காலை ஒரு மணி நேரம் பணிகளை புறக்கணித்து அனைத்து டாக்டர்கள் சங்கத்தினர் அந்தந்த அரசு மருத்துவமனைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் ஒரு பகுதியாக கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் சுமார் ஒரு மணி நேரம் அனைத்து விதமான பணிகளையும் புறக்கணித்து மருத்துவர்கள் சங்கத்தின் சார்பில் கண்டன போராட்டம் நடைபெற்றது.

மேலும் படிக்க