• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

‘தமிழா நீ தலைவனாக வேண்டும்; இதுவே என் வேண்டுகோள்’ – கமல்ஹாசன் ட்வீட்

May 17, 2019 தண்டோரா குழு

தமிழா நீ தலைவனாக வேண்டும்; இதுவே என் வேண்டுகோள்’ என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என தேர்தல் பிரச்சாரத்தின் போது கமல் பேசியது நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியது. பாஜக உள்ளிட்ட இந்து அமைப்பினர் கமலுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுமட்டுமின்றி கமலுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழா நீ தலைவனாக வேண்டும்; இதுவே என் வேண்டுகோள்’ என மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் ட்வீட் செய்துள்ளார்.

இது தொடர்பாக கமல் தனது டுவிட்டர் பக்கத்தில்,

சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தையும் நிறுத்த நினைக்கின்றனர் மத்திய/ மாநில அரசுகள். மக்கள் எடுத்துவிட்ட முடிவை தாமதப்படுத்தலாமே தவிர தடை செய்ய முடியாது .12 ஆழ்வார்களாலோ, 63 நாயன்மார்களாலோ இந்து என்றகின்ற மதக்குறிப்பு சொல்லபடவில்லை. முகலாயர் அல்லது அதற்கு முன் ஆள வந்தாராலோ இந்து என நாமகரணம் செய்யப்பட்டோம். ஆண்டு அனுபவித்துச் சென்ற ஆங்கிலேயர் அந்த அடைமொழியை வழிமொழிந்தனர். நமக்கென பல்வேறு அடையாளங்கள் இருக்கும் பொழுது, மாற்றான் கொடுத்த பட்டயத்தை நாம் பெயராக மதமாக கொள்வது எத்தகைய அறியாமை.நாம், நம் அகண்ட தேசத்தை மதத்திற்குள் குறுக்க நினைப்பது வர்த்தக/ அரசியல் மற்றும் ஆன்மீக ரீதியாகவும் பிழையான தேர்வாகும்.

புரியலன்ற சோமாரிகளுக்கு..

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்று எத்தனை முறை தமிழனுக்கு பழமொழி சொல்லியிருக்கின்றோம். கோடி ன்ன உடனே பணம் ஞாபம் வந்தால் நீ தலைவன் அல்ல, அரசியல்வாதி அல்ல. வெறும் வியாதி! தமிழா நீ தலைவனாக வேண்டும் இது என் வேண்டுகோள்.

இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும் படிக்க