• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழர் பிரதமராக வாய்ப்புகள் வந்த போது அதை தடுத்து நிறுத்தியது திமுக தான் – வானதி சீனிவாசன்

June 12, 2023 தண்டோரா குழு

பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு சட்டமன்ற அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது,

அமித்ஷா குறித்து முதல்வர் ஸ்டாலின் மேட்டூரில் அளித்த பேட்டி குறித்து பேசினார்.அப்போது இதற்கு முன்பு தமிழர் பிரதமராக வாய்ப்புகள் வந்த போது அதை தடுத்து நிறுத்தியது திமுக எனவும் மூப்பனார் பிரதமர் ஆவதை திமுக ஆதரிக்க வில்லை எனவும் தெரிவித்தார். மேட்டூரில் குறிப்பிட்ட காலத்திற்கு தண்ணீரை திறக்க காரணம் மோடிதான் என தெரிவித்த அவர், வேளாண் பட்ஜெட்டை முதன்முதலில் கொண்டு வந்ததும் பா.ஜ.கதான் எனவும் எல்.முருகன், தமிழிசை ஆகியோரை பா.ஜ.க பிரமாக்கலாம் என்று முதல்வர் சொல்லி இருக்கின்றார்.

சட்டமன்ற தேர்தலில் தோற்றாலும், பட்டியல் இனத்தை சேர்ந்த எல்.முருகனை மத்திய அமைச்சராக்கியது பா.ஜ.க எனவும் பட்டியல் இனத்தவரை தமிழக துணை முதல்வராக்க வேண்டும் என்று பா.ஜ.க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது எனவும் 9″ஆண்டு காலமாக தமிழகத்திற்கு பா.ஜ.க எதுவும் செய்ய வில்லை என சொல்கின்றனர் – தமிழகத்தில் சிறப்பு திட்டங்கள் இல்லை என்று சொல்லி இருக்கின்றார், உண்மைதான் எனவும் சிறப்பு திட்டங்கள் கொண்டு வந்த போது கருப்பு பலூன் பறக்க விட்டீர்கள் எனவும் முதல்வர் ஸ்டாலினுக்கு பதில் தெரிவித்தார்.

டிபன்ஸ் காரிடர் என்ற சிறப்பு திட்டம் தமிழகம், உ.பி ஆகிய இரு மாநிலங்களுக்கு மட்டுமே கொடுக்கபட்டது எனவும், பா.ஜ.க கொண்டு வந்த சிறப்பு திட்டங்கள் உங்கள் கண்ணுக்கு தெரியாது என முதல்வரை விமர்சித்த வானதி,
9 ஆண்டு காலத்தில் என்னென்ன செய்துள்ளோம் என்பதை தினமும் பட்டியலிட்டு சொல்லி கொண்டு இருக்கின்றோம், அது உங்களுக்கு புரியவில்லையா? எனவும் கேள்வி எழுப்பினார்.

மேலும் லபேல் ஊழல் விவகாரம் நீதிமன்றத்தால் முடித்து வைக்கபட்டது என தெரிவித்த அவர்,தமிழர்கள் 50 ஆண்டுகளுக்கு மேலாக தேசிய தலைமைகளாக உருவாக வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது என்ற அர்த்ததில்தான் அமித்ஷா,தமிழர் பிரதமாக வேண்டும் என்பதை சொல்லி இருக்கின்றார் எனவும், மோடி பிரதமர் இல்லை என அமித்ஷா சொல்லவில்லை எனவும் ராஜாஜி, காமராஜ், வெங்கட்ராமன், சி.சுப்பிரமணியம் போல தேசிய தலைவர்கள் தமிழகத்தில் இருந்து வரும் சூழல் இல்லை என்பதையே அமித்ஷா குறிப்பிட்டு சொல்லி இருக்கின்றார் எனவும்,மோடி பிரதமர் இல்லையா என்று சொல்வது அபத்தமானது என இவ்வாறு தெரிவித்தார் பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க