• Download mobile app
16 May 2024, ThursdayEdition - 3018
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழர்கள் எங்கிருந்தாலும் பிரச்னை என்றால் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசுதான் – மோடி

March 6, 2019 தண்டோரா குழு

தமிழர்கள் எங்கிருந்தாலும் பிரச்னை என்றால் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசுதான் அதிமுக- பாஜக கூட்டணி பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.

சென்னை கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் பல்வேறு அரசு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிக்கப்பட்ட திட்டங்களை திறந்து வைத்தார். பின்னர் அதிமுக- பாஜக கூட்டணி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்,

வாரணாசி தொகுதியை சேர்ந்த எம்.பி இங்க காஞ்சிக்கு வந்து இருக்கிறேன். தமிழ் மொழி உலகத்தில் உள்ள மொழிகளில் சிறந்தது. மத்திய அரசு தமிழகத்தில் முனனேற்றத்திற்கு தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. நகரங்களில் சிறந்த காஞ்சிபுரத்தில் இருக்கிறோம். செம்மொழிகளில் முதன்மையானது தமிழ் மொழி, தமிழ் மொழி மிக அழகானது. ரயில் மற்றும் நெடுஞ்சாலை திட்டங்கள் நகரங்களை இணைத்து, பயண நேரங்களை குறைக்கும். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயர் சூட்டப்படும். தமிழகத்திற்கு வந்து செல்லும் விமானங்களில் அறிவிப்புகளை தமிழிலேயே அறிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

இந்தியாவை பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி முனையமாக்குவது எங்கள் நோக்கம்; தமிழகத்தில் அமையும் பாதுகாப்பு தொழில்பூங்கா தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் பாகிஸ்தானிலிருந்து அபிநந்தனையும், இலங்கையில் சிக்கிய 1900 தமிழக மீனவர்களையும் நாங்கள் மீட்டு கொண்டுவந்துள்ளோம். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு மத்திய அரசு சார்பில் 14 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படும் எதிர்க்கட்சிகள் சுயநலத்திற்காக வலிமையான நாட்டையும், ராணுவத்தையும் விரும்பவில்லை.தேசிய ஜனநாயக கூட்டணியில் முடிவுகளை மக்கள்தான் எடுக்கிறார்கள். காங்கிரசால் மாநில நலன்களை பூர்த்தி செய்யமுடியாது; ஏனென்றால் அவர்களுக்கு குடும்பமே முக்கியம். டெல்லி காங்கிரஸ் தலைவர்களால் காமராஜர் அவமானப்படுத்தபட்டதை மறக்க முடியாது.

“தமிழக மீனவர்கள் 1900 பேரை மத்திய அரசு மீட்டுக் கொண்டு வந்துள்ளது. யாழ்ப்பாணத்திற்கு சென்ற முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நான் பெற்றுள்ளேன். தமிழர்கள் எங்கிருந்தாலும் பிரச்னை என்றால் முதலில் நடவடிக்கை எடுப்பது மத்திய பாஜக அரசுதான். மறைந்த முதல்வர் ஜெயலலிதா கண்ட கனவில் முன்னேற்றத்துடன் நாம் பயணிக்கின்றோம்.என்னை பற்றிய விமர்சனங்களை கண்டுகொள்ளாமல் நாட்டின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பாடுபடுகிறேன்.எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும் இந்த நாட்டு மக்களுக்காகவே; மக்களின் ஆசிர்வாதத்துடன் இன்னும் நிறைய செய்ய காத்திருக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க