• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழர்களே, போராட்டத்திற்கு தாயாராகுங்கள்- கட்ஜு

March 9, 2017 தண்டோரா குழு

“ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் ஒட்டு மொத்த நாட்டையே வியக்க வைத்த தமிழர்களே! அடுத்த போராட்டத்திற்கு தாயாராகுங்கள் என உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி கட்ஜு கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக டிவிட்டரில் அவர் வெளியிட்ட வேண்டுகோள்:

“தமிழர்களே! நீங்கள் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் மூலம் ஓட்டுமொத்த இந்திய நாட்டையும் வியக்க வைத்து ஹீரோக்கள் என்பதை நிரூபித்து விட்டீர்கள். இப்போது தமிழ்நாடும், ஒட்டுமொத்த தேசமும் இன்னொரு ஹீரோயிசத்தை உங்களிடமிருந்து எதிர்ப்பார்க்கிறது.

ஊழல் வழக்கில் சிறையில் உள்ள கைதிக்கு ஆதரவு அளித்த எம்.எல்.ஏ.க்கள் வீடு மற்றும் அலுவலகம் முன் இளைஞர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்த வேண்டும்.

அவர்களைச் சமூகத்தில் புறக்கணிக்க வேண்டும். எம்.எல்.ஏ.க்கள் எங்கு சென்றாலும், அங்கெல்லாம் அவர்களுக்குக் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். சோழர்களின் வழிவந்த தமிழக மக்கள் என்பதை அவர்களுக்கு உணர செய்ய வேண்டும்”.

இவ்வாறு கட்ஜு கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் படிக்க