• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழன் உடம்பில் படர்தாமரை வளருமே தவிர, தமிழ் நிலத்தில் தாமரை மலராது – கோவையில் சீமான் பேச்சு

March 25, 2021 தண்டோரா குழு

தமிழன் உடம்பில் படர்தாமரை வளருமே தவிர, தமிழ் நிலத்தில் தாமரை மலராது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

கோவை சிவானந்தாகாலணி பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

அப்போது பேசிய அவர்,

இனிவரும் காலங்களிலும் தனித்து தான் நாம்தமிழர் கட்சி போட்டியிடும்.பாஜகவின் உண்மையான பி டீம் திமுக தான். சிறுபான்மையினரின் பாதுகாவலர் என்கிற திமுக சிறுபான்மையினருக்கு தேர்தலில் குறைவான இடங்களே கொடுத்துள்ளது. 1998 தேர்தலில் அதிமுகவுடன் முதலில் கூட்டணி வைத்தது ஜெயலலிதா. 1999 தேர்தலில் தோள் கொடுத்து தூக்கியது திமுக எனவும், ஐந்து ஆண்டுகள் முழுமையாக பாஜக ஆட்சி செய்ய திமுக தான் காரணம் எனவும் அவர் தெரிவித்தார்.

திருடன் கூட்டத்தில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க திருடன், திருடன் என கத்துவது போல பி டீம் என திமுக சொல்கிறது.திமுக போன்ற நாடகக்காரர்களை உலகத்தில் பார்க்க முடியாது. எத்தனை முறை நட்டா வந்தாலும், பாஜக நோட்டாவிற்கு கீழ் தான் இருக்கும் எனவும், நாம் தமிழருக்கு வாக்களிப்பதால் பாஜக வந்துவிடும் என அஞ்சும் கோழைகள் வாக்களிக்க வேண்டாம். நாங்கள் இருக்கும் வரை பாஜக வராது என நம்புபவர்கள் எனக்கு வாக்களியுங்கள் எனவும் அவர் கூறினார்.

பாஜகவுடன் அதிமுக நல்ல உறவு கொண்டுள்ளது. திமுக கள்ள உறவு கொண்டுள்ளது எனவும், தமிழன் உடம்பில் படர்தாமரை வளருமே தவிர, தமிழ் நிலத்தில் தாமரை மலராது எனவும் அவர் தெரிவித்தார். தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் சேரமாட்டேன் என திமுக சொல்லுமா எனக் கேள்வி எழுப்பிய அவர், ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அதிமுக கட்சியையும், ஆட்சியையும் பாஜக பயன்படுத்திக் கொண்டது எனத் தெரிவித்தார்.

மேலும் படிக்க