April 16, 2018
தண்டோரா குழு
கோவை கருமத்தம்பட்டி பகுதியில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாகவும்,அதிகாரிகள் உடந்தையாக இருப்பதாகவும் கூறி தமிழக விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் 24 மணி நேரமும் நடைபெறும் சட்ட விரோத மது விற்பனையை தடுக்க கோரி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.மக்கள் போராட்டங்களால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட நிலையில்,ஹோட்டல்கள், தாபாக்கள், விவசாய நிலங்களில் சட்ட விரோதமாக மது விற்கப்படுவதாக புகார் தெரிவித்தனர். மது விற்பனையை தடுக்கக்கோரி பலமுறை மனு கொடுத்தும் காவல் துறை அதிகாரிகளின் துணையோடு நடைபெறுவதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்தனர்.இந்நிலையில் விவசாயிகள் வெத்தலை பாக்கு,பழங்களை தாம்பூலத்தில் எடுத்து வந்து மரியாதையுடன் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தனர்.