February 6, 2018
தண்டோரா குழு
2018-19ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கான ரயில் திட்டம் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
2018-19ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டில் தமிழக ரயில்வே திட்டங்களுக்கு ரூ.2,548 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.ரூ.376 கோடி செலவில் பெங்களூரு – ஓசூர் இடையேயான 48 கி.மீ. தூரம் இரட்டை ரயில்பாதை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,தமிழக ரயில்வே திட்டங்களுக்கு 2009 முதல் 2014 வரை 879 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த நிதியாண்டில் 2,548 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இது 190 சதவீதம் கூடுதலாகும்.