June 21, 2018
தண்டோரா குழு
கடந்த மே மாதம் விளையாட்டு துறை அமைச்சர் ராஜய்வர்த்தன் சிங் ரத்தோர் தனது புஸ்அப்ஸ் வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்து விராட் கோலி,ஹிருத்திக்ரோஷன்,சாய்னா நேவால் ஆகியோருக்கு இது போன்று பிட்னஸ் மந்த்ரா வீடியோவை பகிர வேண்டும் என்று சவால் விடுத்தார்.
அவரின் சவாலை ஏற்றுக்கொண்ட விராட் கோலி தன் உடற்பயிற்சி வீடியோவை வெளியிட்டு,தன் மனைவி அனுஷ்கா சர்மா,இந்திய பிரதமர் பிரதமர் நரேந்திர மோடி,கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி ஆகியோருக்கு சவால் விடுத்தார்.
இதையடுத்து,கோலியின் பிட்னஸ் சவாலை தான் ஏற்று பிரதமர் மோடியும்,தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.இந்நிலையில்,ஈஷா அறக்கட்டளை நிறுவனரான சத்குரு ஜக்கி வாசுதேவ்,தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம், திமுக செயல்தலைவர் ஸ்டாலின்,ரஜினி ஆகியோருக்கு உடற்பயிற்சி சவால் விடுத்துள்ளார்.
மேலும், தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பதிவிட்ட அவர்,தமிழக மக்களை ஊக்குவிக்கும் விதமாக,பிரபலங்கள் அனைவரும் இந்த சவாலை ஏற்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.