• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

June 11, 2021 தண்டோரா குழு

சமூக நலம் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வைப்பு நிதி பத்திரம் பெற்று 18 வயது முதிர்வு அடைந்துள்ள பயனாளிகள் முதிர்வுத் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில்,

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கீழ் தமிழக முதல்வரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.அதன்படி ஒரு பெண் குழந்தை மட்டும் இருந்தால் ரூ. 50 ஆயிரமும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25 ஆயிரமும் 18 வயது முடிவடைந்த பிறகு முதிர்வுத் தொகை மற்றும் வட்டி தொகையுடன் சேர்ந்து பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தில் பயன்பெற இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று வருடங்களுக்குள் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தில் விண்ணப்பிக்க வேண்டும். குழந்தைகளின் தாயார் குடும்பநல அறுவை சிகிச்சையை செய்திருக்கவேண்டும்.

வருமானச்சான்று ரூ.72 ஆயிரம் பெற்று, ஆண் வாரிசு இல்லை என்ற சான்றுடன் சமர்ப்பிக்க வேண்டும்.18 வயது முடிவடைந்த உடன் வைப்புத் தொகை மற்றும் வட்டி தொகையுடன் சேர்ந்து உதவித் தொகையாக வழங்கப்படும்.அதன்படி விண்ணப்பம் செய்து அசல் வைப்புநிதி பத்திரம் பெற்றுள்ள பயனாளிகளில் பதினெட்டு வயது முதிர்ந்தவர்கள் உரிய ஆவணங்களுடன் கோவை மாவட்டத்தில் உள்ள சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் நகராட்சி அலுவலகங்கள் மற்றும் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் உள்ள சமூகநல அலுவலர் மகளிர் ஊர் நல அலுவலரிடம் அசல் வைப்பு நிதி பத்திரம் பயனாளியின் கடவுச்சீட்டு அளவு புகைப்படம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றதற்கான மதிப்பெண் பட்டியல் மற்றும் பயனாளிகளின் பெயரில் தனி வங்கிக் கணக்கு புத்தகம் நகர் ஆகிய சான்றுகளுடன் சமர்ப்பித்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க