October 12, 2021
தண்டோரா குழு
தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மூலமாக கட்டணமில்லாமல் வழங்குவதற்காகவும், அனைவருக்கும் சுகாதார வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசால் துவங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தை பெறுவதற்கான தகுதி, தமிழ்நாட்டில் வசிப்பவரின் குடும்ப அட்டையில் அவர்களது பெயர் இருக்கவேண்டும். ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும்.
கோவை மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் கடந்த மே மாதம் முதல் இதுவரை 16 ஆயிரத்து 754 பயனாளிகளுக்கு ரூ.48.07 கோடி மதிப்பில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டுள்ளன.