• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக முதலமைச்சரின் பேச்சு விஷமத்தனமானது – திருப்பூர் எம்பி கே.சுப்பராயன்

June 8, 2019 தண்டோரா குழு

காவிரியில் இருந்து தண்ணீர் பெற்றுத்தர தமிழகத்தில் இருந்து வெற்றி பெற்ற எம்பிக்கள் முயற்சிப்பார்கள் என்ற தமிழக முதலமைச்சரின் பேச்சு விஷமத்தனமானது என திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கே.சுப்பராயன் விமர்சித்துள்ளார்.

கோவை ஜீவா இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஆட்சியில் இருப்பதோடு, மத்திய பாஜக அரசுடன் இணக்கமாக உள்ள அதிமுக, மேகதாட்டூவில் அணை கட்டுவோம் என்ற கர்நாடக அரசின் அறிவிப்பை எதிர்த்து போராடமல் தவிர்த்துவிட்டு இவ்வாறு முதலமைச்சர் பேசுவதாகவும் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் 3 பேர் பலியாகியுள்ளதற்கு மத்திய அரசு தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், இதுவரை நடந்த நீட் தேர்வுகளில் 20 ஆயிரம் எஸ்.சி, எஸ்.டி பிரிவினரும், 60 ஆயிரம் பொதுப்பிரிவினரும், 7 லட்சம் முற்பட்ட வகுப்பினரும் வெற்றி பெற்றுள்ளதாக வரும் தகவல்கள் ஆயிரம் ஆண்டுகளாக கற்பதையும் கற்பிப்பதையும் தொழிலாக கொண்ட பிராமணர்களுடன் கல்வியில் போட்டிக்கு வரக்கூடாது என்பதற்காகவே வர்ணாசிரம நோக்கத்துடன் நீட் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக பிற்படுத்தப்பட்ட மக்கள் பொதுப்பிரிவினருடன் ஒன்றுபட்டு போராட வேண்டும் பாஜக, மான் அல்ல மாரீசன் என்பதை மக்கள் விரைவில் உணர்ந்து கொள்வார்கள்.60 ஆண்டுகளாக கட்டிக்காத்த 245 பொதுத்துறை நிறுவனங்களின் தற்போதைய நிலை என்ன எனவும் அவற்றின் பங்குகளை தனியாருக்கு வழங்குவது தொடர்பாக பொதுவாக்கெடுப்பை நடத்த மத்திய அரசு தயாரா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.

இந்திய சந்தைகளில் இருந்து இந்திய பொருட்களை அப்புறப்படுத்திவிட்டு வெளிநாட்டு பொருட்களை நிரப்பியுள்ளது தான் தேசபக்தியா?

நாடு முழுவதும் பல லட்சம் வேலைவாய்ப்புகளை வழங்கிய 6 லட்சம் தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் எத்தனை சிறுகுறு தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளது என்பது குறித்து அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தமிழகத்திற்கு எதிராக திட்டமிட்டு ஹட்ரோகார்பன், எட்டுவழிச்சாலை உள்ளிட்ட திட்டங்களை மறைமுகமாக மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.

மும்மொழி கொள்கையால் தமிழகத்தில் தமிழை படிக்காமல் பட்டம் பெறலாம் என்ற நிலை உருவாக கூடாது. 300க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கையின் போது மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளில் பாஜக முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகம் பாமர மக்களிடம் உள்ளது.

இது தொடர்பாக டெல்லியில் நடைபெறும் கட்சியின் தேசிய கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் எனவும் அவர் அப்போது தெரிவித்தார்.

மேலும் படிக்க