• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக பொறுப்பு ஆளுநரிடம் தி.மு.க. எம்பிக்கள் வைத்த மூன்று முக்கிய கோரிக்கைகள்!

April 12, 2017 தண்டோரா குழு

தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா மற்றும் ஆர்.எஸ். பாரதி மும்பையில் தமிழக ஆளுநரை சந்தித்தது மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்தனர்.

தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவை மும்பையில் தி.மு.க. முதன்மை செயலாளர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர்கள் திருச்சி சிவா மற்றும் ஆர்.எஸ். பாரதி ஆகியோர் சந்தித்து மூன்று முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

அதில்,டெல்லி ஜந்தர் மந்தரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 30 நாள்களாக வித்தியாசமான போராட்டங்களில் தமிழக விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற, நடவடிக்கை எடுக்க வேண்டும். வருமானவரி சோதனையில் சிக்கிய அமைச்சர் விஜயபாஸ்கரை பதவியில் இருந்து நீக்க வேண்டும். மேலும், பணப் பட்டுவாடாவால் ரத்தான ஆர்.கே.நகர் தேர்தல் பற்றியும் தி.மு.க எம்பி-க்கள் ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளனர்.

மேலும் படிக்க