• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக பட்ஜெட் உதவாக்கரை பட்ஜெட் -ஸ்டாலின் விமர்சனம்

February 8, 2019 தண்டோரா குழு

ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத, உதவாக்கரை பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் 2019 -20-ம் நிதி ஆண்டிற்கான தமிழக பட்ஜெட்டை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் 8-வது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். மக்களவை தேர்தல் காரணமாக முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் இந்த பட்ஜெட் குறித்து எதிர்க்கட்சி தலைவரும் திமுக தலைவருமான முக.ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

ஏழை, எளிய மக்களுக்கு பயன்படாத வகையில் தமிழக பட்ஜெட் உள்ளது. சுமார் 4 லட்சம் கோடி ரூபாய் கடன் இருக்கிறது. வருவாயைபெருக்குவதற்கான எந்த அறிவிப்பும் இல்லை. கொடநாட்டில் கொள்ளையடித்தது போல தமிழகத்தை கொள்ளையடிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. பொருளாதாரத்தில்அரசின் தோல்வியையே பட்ஜெட் காட்டுகிறது. உள்ளாட்சிஅமைப்புகளுக்கான தேர்தலை நடத்தாததால் சீரழியும் நிலை. விவசாயிகளுக்காகவும், அரசின் வருவாயை பெருக்குவதற்காகவும் பட்ஜெட்டில் எந்த திட்டமும் இல்லை.அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து இந்த பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. நெல் கொள்முதலுக்கான விலை, கரும்புக்கான ஆதார விலையை அரசு உயர்த்தவில்லை. சங்கீத வித்வான் போல நிதியமைச்சர் ஓபிஎஸ் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறார். திவாலான கம்பெனியைப் போன்ற சித்திரத்தையே பட்ஜெட் வழங்குகிறது.ஏழை எளிய மக்களுக்கு பயன்படாத, உதவாக்கரை பட்ஜெட். வளர்ச்சிக்கானபட்ஜெட் அல்ல வாங்கிய கடனுக்கான வட்டியை செலுத்தும் பட்ஜெட் எனக் கூறியுள்ளார்

மேலும் படிக்க