• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

April 12, 2017 தண்டோரா குழு

திருப்பூரில் பெண்களை ஏடிஎஸ்பி தாக்கியது பற்றி பதிலளிக்க தலைமைச் செயலாளர், டிஜிபிக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் நெடுஞ்சாலை ஓரம் டாஸ்மாக் மது பானக்கடை இயங்கி வருகிறது. இதனை மூட கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களும் ஆண்களும் நேற்று போராட்டம் நடத்தினர். இதையடுத்து அங்கு வந்த அதிகாரிகள் டாஸ்மாக் கடை மூடப்படும் என வாய்மொழியாக உத்திரவாதம் அளித்தனர். எனினும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், போராட்டக் காரர்களை கலைந்துபோகக் கூறி போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். இதையடுத்து விரைந்து வந்த அதிரடி படை போலீசார், அங்கிருந்த பொது மக்களை கண் மூடித்தனமாக தாக்கினார. அப்போது போலீசார் ஒருவர் ஒரு வயதான பெண்மணியின் கன்னத்தில் ஓங்கி பளார் என நடு ரோட்டில் அடித்தார்.அதனை தொடர்ந்து, பலரது மண்டை உடையும் அளவுக்கு போலீசார் கண் மூடித்தனமாக தாக்கினர். இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக டிஜிபி மற்றும் தலைமை செயலாளருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் வழங்கியள்ளது. அதில், திருப்பூரில் பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தியது குறித்து 2 வாரத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. மேலும், திருப்பூர் மாவட்ட எஸ்.பி.யும் விளக்கம் அளிக்குமாறு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

மேலும் படிக்க