• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக சிறை தொழிற்கூடங்களுக்கு ரூ.38 கோடி மூல பொருட்கள் வாங்க டெண்டர்

February 7, 2023 தண்டோரா குழு

தமிழகத்தில் சென்னை புழல் 1,2,கோவை, பாளையங்கோட்டை,திருச்சி,மதுரை,சேலம் என 11 பிரதான சிறைகள் உள்ளது.இந்த சிறைகளில் சுமார் 22 ஆயிரம் கைதிகள் உள்ளனர். இதில் தண்டனை கைதிகளுக்காக சிறைகளில் தொழில் கூடங்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. பேப்பர் பொருட்கள், சீருடை, ஷூ, சாக்ஸ், தையல், அட்டை பெட்டி என பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது.

கொரோனா நோய் பரவல் நிலையில் சிறைகளில் உற்பத்தி வெகுவாக முடங்கியது. தற்போது தொழிற்சாலைகள் வழக்கம் போல் இயக்கத்திற்கு வந்து விட்டது. நடப்பாண்டில் உற்பத்திக்கு தேவையான மூலபொருட்களை கொள்முதல் செய்ய சிறைத்துறை நிர்வாகம் டெண்டர் விட்டுள்ளது. மாநில அளவில் 11 சிறைகளுக்கும் 38 கோடி ரூபாய் செலவில் மூல பொருட்கள் மற்றும் தொழிற்சாலை இயந்திரங்களுக்கான உதிரிபாகங்கள் பெறப்படவுள்ளது.

போலீஸ், தீயணைப்பு, வனத்துறையினர் பயன்படுத்தும் பெல்ட், பக்கிள், ஷூ தயாரிக்க தேவையான பொருட்கள், மரகட்டைகள், காடா துணிகள் போன்றவை கொள்முதல் செய்யப்படவுள்ளது.

சிறைத்துறையினர் கூறுகையில், ‘‘

சிறை கைதிகள் தொழில் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். சுமார் 5 ஆயிரம் கைதிகள் தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள். தண்டனை காலம் முடிந்து வெளியே சென்று வேலை செய்ய தேவையான தகுதிகளை வளர்த்து கொண்டிருக்கிறார்கள். சிறைகளில் நடக்கும் கட்டுமான பணிகளில் கைதிகள் சிலர் வேலை செய்கிறார்கள். பெட்ரோல் பங்குகளிலும், திறந்த வெளி சிறையில் விவசாய பணி, சிறைத்துறை கேண்டீன், டீக்கடையிலும் கைதிகள் வேலை ெசய்து வருகிறார்கள். சிறை நிர்வாகம் கைதிகளுக்கு நல்ல வேலை வாய்ப்புகளையும், திருந்தி வாழ நல்ல சூழலையும் ஏற்படுத்தி கொடுத்து வருகிறது, ’’ என்றனர்.

மேலும் படிக்க