March 22, 2018
தண்டோரா குழு
மார்ச் 15ம் தேதி துவங்கிய தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடரை சபாநாயகர் இன்று ஒத்தி வைத்துள்ளார்.
மார்ச் 15ம் தேதி தமிழக சட்டபேரவைகூடி 2018 –19ம் ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து 4 நாட்கள் பேரவை கூட்டம் நடைபெற்று வந்தது. தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டதிருத்த மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தனியார் மருத்துவமனைகள் பதிவு, முறைப்படுத்துதல் சட்டத்திருத்த மசோதாவும் நிறைவேறியது. போலி மருத்துவர்கள், மருத்துவ குற்றங்களை தடுக்கும் வகையில், சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து கூட்டத் தொடரை தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் தனபால் இன்று ஒத்திவைத்தார்.