• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது

June 28, 2019 தண்டோரா குழு

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 4 நாட்களுக்கு விவாதம் நடைபெற்ற நிலையில், மக்களவை தேர்தல் காரணமாக, ஒரு மாதம் வரை நடைபெறும் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறாமல் தமிழக சட்டப்பேரவை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலுக்கு பிறகு, இன்று காலை சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது.
அப்போது, சூலூர் அதிமுக எம்எல்ஏ கனகராஜ், விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி மறைவுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேலும்,முன்னாள் எம்எல்ஏக்கள் 8பேரின் மறைவுக்கும் பேரவையில் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பின்னர், தமிழக சட்டப்பேரவை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து திங்கள் முதல் ஒவ்வொரு துறைக்கான மானியக் கோரிக்கை அவையில் தாக்கல் செய்யப்பட்டு அதன் மீது விவாதம் நடைபெறும். இந்த விவாதங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிடுவார். வரும் ஜூலை 30-ஆம் தேதி வரை இந்தக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

மேலும் படிக்க