• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு!

May 10, 2021 தண்டோரா குழு

தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.

நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில், திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது.அதிமுக கூட்டணி 75 இடங்களில் வென்றது.இதில் அதிமுக 65 இடங்களை கைப்பற்றியது.தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் யார் என்று முடிவு செய்யப்படாம இருந்த நிலையில், திமுகவில் இந்த பதவிக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளார் எடப்பாடி பழனிசாமி இடையே கடும் போட்டி நிலவிவந்தது.

கடந்த 7ஆம் தேதி அதிமுகவின் எதிர்க்கட்சி தலைவர் யார் என்பது தொடர்பாக சென்னை ராயாப்பேட்டை தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் யார் என்பதை தேர்வு செய்ய செய்ய அதிமுக இன்று மீண்டும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் தமிழக சட்டப்பேரவையின் எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக கூட்டம் நடைபெற்ற நிலையில், இறுதியாக இபிஎஸ் அறிவிக்கப்பட்டார்.

மேலும் படிக்க