• Download mobile app
14 Sep 2025, SundayEdition - 3504
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேறியது லோக் ஆயுக்தா மசோதா!

July 9, 2018 தண்டோரா குழு

தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதா நிறைவேறியது.லோக் ஆயுக்தா மனுவை தேர்வுக் குழுவிற்கு அனுப்பாததைக் கண்டித்து சட்டப் பேரவையிலிருந்து திமுக வெளிநடப்பு செய்தது.

இந்தியாவில் அரசுத் துறைகளில் நடக்கும் ஊழல்களை விசாரிக்கும் வகையில் கடந்த 2013-ம் ஆண்டு லோக்பால்,லோக் ஆயுக்தா சட்டம் உருவாக்கப்பட்டது.இச்சட்டம் 2014 ஜனவரி 16 முதல் அமலுக்கு வந்தது.

அதன் பின் நாட்டிலேயே முதன்முதலாக மகாராஷ்டிரா மாநிலத்தில் லோக் ஆயுக்தா ஏற்படுத்தப்பட்டது.இதனைத்தொடர்ந்து பிஹார்,ராஜஸ்தான்,உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பு ஏற்படுத்தப்பட்டது.

லோக் ஆயுக்தா தற்போது ஆந்திரா,கேரளா,கர்நாடகா,குஜராத் உள்ளிட்ட 17 மாநிலங்களில் இயங்கி வருகிறது.ஆனால் தமிழகம்,தெலுங்கானா,மேற்கு வங்கம்,ஒடிஷா,புதுச்சேரி உள்ளிட்ட 12 மாநிலங்கள் இன்னும் லோக் ஆயுக்தா சட்டத்தை இயற்றவில்லை.

இதற்கிடையில் லோக் ஆயுக்தா அமைப்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து ஜூலை 10-ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில்,தற்போது நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன் (திங்கள்கிழமை) முடிவடைகிறது.இதையடுத்து,தமிழக சட்டப்பேரவையில் லோக் ஆயுக்தா மசோதாவை அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்தார்.

மேலும் படிக்க