• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக-கேரள எல்லை; ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்குள் நுழையும் செயல்கள் தடுத்து நிறுத்த முடியாமல் அதிகாரிகள் திணறல்

March 24, 2020 தண்டோரா குழு

தமிழக கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடி வழியாக ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்குள் நுழையும் செயல்கள் தடுத்து நிறுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர்.

தமிழக-கேரள எல்லையான வாளையாறு சோதனைச் சாவடியில் ஆம்புலன்ஸ்கள் மூலம் கேரளாவில் இருந்து பொதுமக்கள் கோவைக்கு அனுப்பப்படுவதாக அதிகாரிகள் மனம் நொந்து கொள்கின்றனர்.உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதேபோல எல்லைகள் அனைத்தும் வைரஸ் பாதிப்புகள் பரவாமலிருக்க மூடப்பட்டுள்ளது.மேலும் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் தமிழக-கேரள எல்லைப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில் தமிழக-கேரள எல்லையான வாளையார் பகுதியில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவைக்குள் பொதுமக்கள் அனுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதைத்தொடர்ந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சட்டவிரோதமாக சைரன் எழுப்பி பொதுமக்களை அழைத்து வரும் ஆம்புலன்ஸை தடுத்து நிறுத்திய போது கேரளாவில் தவறான வதந்திகள் பரப்பப்பட்டது.
இதைத்தொடர்ந்து கேரளா போலீஸ் உதவியுடன் சட்டவிரோதமாக கோவை எல்லைக்குள் மக்கள் அனுப்பப்படுகின்றனர். இது எல்லையில் சோதனை மேற்கொள்ளும் அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அதேபோல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வரும் பொதுமக்கள் எங்களை விரைவாக பரிசோதனை செய்து வீட்டுக்கு அனுப்பும் படி கோரிக்கை வைக்கின்றனர்.

மேலும் படிக்க