• Download mobile app
15 May 2024, WednesdayEdition - 3017
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக- கேரள எல்லையில் மாவோயிஸ்ட் சுட்டுக்கொலை

March 7, 2019 தண்டோரா குழு

தமிழக- கேரள எல்லையில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏறபடுத்தியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு தமிழகத்தை ஒட்டி அமைந்திருக்கக் கூடிய மாவட்டமாகும். இந்த பகுதியில் உள்ள மைத்திரி என்ற இடத்தில் நேற்று மாவோயிஸ்ட்டுகள் வந்திருப்பத்காக தண்டர்போல்ட் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. வனப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ரிசார்ட் பகுதிக்கு வந்த மாவோயிஸ்டுகள் அங்கிருந்து உணவுப்பொருட்களை தங்களது தரும்படியும் மேலும் கூடுதலாக உணவுப் பொருட்கள் வாங்கி வரும்படியும் ரிசார்ட் உரிமையாளர்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.

ரிசார்ட் உரிமையாளர்கள் அளித்த தகவலை தொடர்ந்து காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இதனை தொடர்ந்து இரவு 10 மணி அளவில் மாவோயிஸ்ட் அமைப்பினருக்கும் தண்டர்போல்ட் காவல்துறையினருக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்தத் துப்பாக்கிச் சூட்டில் சம்பவ இடத்திலேயே மாவோயிஸ்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொரு மாவோயிஸ்ட் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் காயமடைந்த மாவோயிஸ்ட் உடன் இருந்த மற்றொருவர் வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இந்நிலையில் இறந்த மாவோயிஸ்ட் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் வலராடு பகுதியை சார்ந்த ஜலீல் என்பது தெரியவந்துள்ளது. இதை தொடர்ந்து தமிழக போலீசாரும் தமிழக கியூ பிரிவு போலீசாரும் தற்போது கேரள மாநிலத்திற்கு விரைந்திருக்கிறார்கள் இதே போன்று கேரள போலீசாரும் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் ஜஜி தலைமையில் தற்போது வயநாடு பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் இரவு நேரத்தில் மாவோயிஸ்டுகள் வந்த சிசிடிவி காட்சிகள் அங்கு உள்ள ரிசார்ட்டில் பதிவாகி இருப்பதாக கூறப்படுகிறது இதைத் தொடர்ந்து அந்த சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டும் கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.

மேலும் படிக்க