• Download mobile app
22 Dec 2025, MondayEdition - 3603
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதியில் இன்று காலை முதல் வாகன சோதனை தீவிரம்

March 21, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் தமிழகத்திற்குள் அனுமதிக்கப்படாது என தமிழக அரசு நேற்று அறிவித்தது. இதனை தொடர்ந்து கோவையை அடுத்த தமிழக கேரள எல்லையான வாளையார் பகுதியில் இன்று காலை முதல் வாகன சோதனையானது தீவிரப்படுத்தபட்டுள்ளது.

கேரள எல்லையான வாளையார் பகுதியின் வழியாக தமிழகத்திற்குள் வரும் கனரக வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றது. தமிழகத்திற்குள் இருந்து கேரளா செல்லும் வாகனங்களை மீண்டும் வரும் 31ம் தேதி வரை தமிழகம் வரக்கூடாது என அறிவுறுத்தி அனுப்பி வருகின்றனர். கேரளாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளின் வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் போன்றவை மீண்டும் கேரளாவிற்கே திருப்பி அனுப்பபட்டு வருகின்றது. இந்த பணிகளை கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி மற்றும் கோவை எஸ்.பி.சுமித்சரண் ஆகியோர் தலைமையில் அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அப்போது பேசிய மாவட்ட ஆட்சியர்,

வாளையார் சோதனைசாவடியில் மேற்கொள்ளப்படும் பணிகளை ஆய்வு செய்த பின்னர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முழுவீச்சில் நடைபெறுகின்றது எனவும், கேரள எல்லையோராத்தில் மருத்துவகுழுக்கள் தீவிர சோதனை நடத்தி வருகின்றது எனவும் தெரிவித்தார். மேலும், கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு அத்தியாவசிய பொருட்களுடன் வரக்கூடிய வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றது. பொது மக்கள், தனியார் வாகனம், பேருந்துகள் , சுற்றுலா வாகனம் , இரு சக்கர, மூன்று சக்கர ,நான்கு சக்கர வாகனங்கள் நுழைய வேண்டாம் என அறிவுறுத்தி திருப்பி அனுப்பி வருகின்றோம் எனவும் இந்த பணி வரும் 31 ம் தேதி வரை தொடரும் எனவும் தெரிவித்தார்.

மேலும் கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா சோதனைக்கான ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது எனவும், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா அறிகுறி இருந்த 5 பேரில் 3 பேருக்கு நெகட்டிங் என ரிசல்ட் வந்துள்ளது எனவும் தெரிவித்தார்.நாளை காலை முதல் மாலை வரை வீட்டில் இருக்க பிரதமர் அறிவுறுத்தி இருக்கும் நிலையில் மக்கள் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் ஆட்சியர் ராசாமணி வலியுறுத்தினார்.மேலும் மாநில எல்லைகளில் நடந்து செல்பவர்களையும் சோதனை நடத்த அறிவுறுத்தப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

மேலும் படிக்க