• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழக – கேரளா எல்லையில் பண்டல் பண்டலாக கஞ்சா பறிமுதல் – 3 பேர் கைது

November 4, 2020 தண்டோரா குழு

தமிழகத்தில் இருந்து கோவை வழியாக கேரளாவிற்கு கஞ்சா கடத்தப்படுவதாக கேரள மாநில போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதை தொடர்ந்து இன்று பிற்பகல் தமிழக எல்லையை அடுத்த வாளையாறு பகுதியில் கேரள மாநில போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது தமிழகம் பதிவெண் கொண்ட ஆட்டோ வந்தபோது அதை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர்.அதில் பண்டல் பண்டலாக கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

இதனையடுத்து ஆட்டோவில் வந்த 3 பேரை பிடித்து கேரள போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஈரோட்டில் இருந்து கோவை வழியாக ஆட்டோ மூலம் கேரளாவுக்கு கஞ்சா கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து ஆட்டோவில் வந்த தேனியை சேர்ந்த ஜெயசீலன், காதர் மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த கேசவன் ஆகிய 3 பேரை வாளையார் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் சில்லறை மதிப்பு 63 லட்ச ரூபாய் இருக்கும் எனவும், தேனி , கம்பம் பகுதியில் இருந்து கொண்டு வரப்பட்ட கஞ்சாவை, ஈரோட்டில் வைத்து பேக்கிங் செய்து கேரளாவிற்குள் கொண்டு வந்து இருப்பதும் வாளையார் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேரிடமும் வாளையார் போலீசார் ( கேரளா) விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க