April 7, 2020
தண்டோரா குழு
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தமிழகத்தில் அனைத்து எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.1 கோடியை பயன்படுத்த
முதல்வர் பழனிசாமி உத்திர விட்டுள்ளார்.
இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கையில்,
எம்.எல்.ஏ.,க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தலா ரூ.1 கோடி பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை ஒருங்கிணைந்து மாநில அளவில் பயன்படுத்தப்படும். மாவட்ட, மாநில அளவில் மருத்துவ உபகரணம், மருந்து வாங்கவும், தடுப்பு நடவடிக்கைக்கும் பணம் பயன்படுத்தி கொள்ளப்படும்.
தொகுதி மேம்பாட்டு நிதி விதிமுறைப்படி சப்பந்தப்பட்ட பகுதிகளில் தான் நிதியை பயன்படுத்த முடியும். எம்.எல்.ஏ.,க்கள் பரிந்துரைப்படி வரையறுக்கப்பட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். இதை அறியாமல், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், வழிமுறைகளின்படி செயல்பட்டதை குறை சொல்கிறார். சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ., நினைத்தால், தங்களது தொகுதிக்கு ரூ.25 லட்சம் கூடுதலாக பயன்படுத்த முடியும்.
இவ்வாறு கூறியுள்ளார்.