April 18, 2018
தண்டோரா குழு
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்று ஆறு மாதங்கள் கடந்த நிலையில் அரசுத் திட்டங்கள் குறித்து பல்வேறு இடங்களில் ஆய்வு நடத்தியது,பேராசிரியர் நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணை நடத்த உத்தரவிட்டது,அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சூரப்பாவை நியமித்தது என ஆளுநர் மீது எதிர்கட்சிகள் குற்றசாட்டுகள் வைத்து வருகின்றனர்.
இதற்கிடையில்,நேற்று பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போது பெண் பத்திரிகையாளர் ஒருவரை ஆளுநர் பன்வாரிலால் கன்னத்தில் தட்டிய விவகாரம் தற்போது கடும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து ஆளுநர் அவரிடம் மன்னிப்பு கோரினார்.எனினும்,ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின்
கூறியுள்ளார்.இந்நிலையில்,ஆளுநர் பன்வாரிலால் நாளை டெல்லி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.